காட்கோபர் பூங்காவில் குஜராத்தி பெயர் பலகை உடைப்பு - உத்தவ் தாக்கரே கட்சியினர் ஆவேசம்


காட்கோபர் பூங்காவில் குஜராத்தி பெயர் பலகை உடைப்பு - உத்தவ் தாக்கரே கட்சியினர் ஆவேசம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:45 AM IST (Updated: 10 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

காட்கோபர் பகுதியில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குஜராத்தி பெயர் பலகையை உத்தவ் தாக்கரே கட்சியினர் உடைத்தனர்

மும்பை,

முல்லுண்டு பகுதியில் சமீபத்தில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மராத்தி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் காட்கோபர் பகுதி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த குஜராத்தி மொழி பெயர் பலகையை உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்கோபர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் "மரு காட்கோபர்" (எனது காட்கோபர்) என குஜராத்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெயர் பலகையை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவினர் உடைத்து அகற்றி உள்ளனர். மேலும் அவர்கள் அந்த இடத்தில் ஜெய் மஹாராஷ்டிரா, (எனது மஹாராஷ்டிரா) என மராத்தியில் போஸ்டர் வைத்துவிட்டு சென்றனர். அந்த போஸ்டரை போலீசார் அகற்றினர்.


Next Story