நீதிதுறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது- உத்தவ் தாக்கரே பேச்சு


நீதிதுறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது- உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 28 Sept 2022 10:30 AM IST (Updated: 28 Sept 2022 10:30 AM IST)
t-max-icont-min-icon

நீதிதுறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை,

சிவசேனா கட்சி கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. தற்போது அந்த கட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. 2 தரப்பினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வில் அம்பு சின்னத்துக்கும் உரிமைகோரி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்னதாக மாதோஸ்ரீயில் தொண்டர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "நீதிதுறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் " என கூறினார்.

1 More update

Next Story