முன்னாள் எம்.எல்.ஏ. ஷிசிர் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலகல்.


முன்னாள் எம்.எல்.ஏ. ஷிசிர் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலகல்.
x
தினத்தந்தி 19 Jun 2023 1:30 AM IST (Updated: 19 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் எம்.எல்.ஏ. ஷிசிர் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

மும்பை,

முன்னாள் எம்.எல்.ஏ. ஷிசிர் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 1991-ம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை சேதப்படுத்தி பிரபலமானவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஷிசிர் ஷிண்டே. சிவசேனாவை சேர்ந்த இவர், ராஜ் தாக்கரே தனிக்கட்சி தொடங்கிய பிறகு நவநிர்மாண் சேனாவில் இணைந்தார். 2018-ம் ஆண்டு நவநிர்மாண் சேனாவில் இருந்து விலகி மீண்டும் சிவசேனாவில் இணைந்தார். ஆனால் இவருக்கு பதவி எதுவும் வழங்கப்படாமல் இருந்தது.

ராஜினாமா

கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டேவால் கட்சியில் பிளவு ஏற்பட்ட பிறகு, ஷிசிர் ஷிண்டேக்கு கட்சியின் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார். கட்சியின் நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தது உத்தவ் தாக்கரே கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Next Story