தானேயில் ரூ.48 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
தானேயில் ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்
தானே,
தானேயை சேர்ந்த 49 வயது பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அதிக வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.57 லட்சம் முதலீடு செய்திருந்தார். ஆனால் நிதி நிறுவனத்தில் உறுதி அளித்தபடி இரட்டிப்பு லாபம் கிடைக்கவில்லை. இதனால் அவர் முதலீடு செய்த பணத்தை நிதி நிறுவனத்திடம் திரும்பி கேட்டு உள்ளார். இதன்படி பெண் முதலீடு செய்திருந்த பணத்தில் ரூ.9 லட்சம் திரும்ப கொடுக்கப்பட்டது. மீதி ரூ.48 லட்சம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றியவர்கள் பெயர் ஜஸ்மீத் சிங், ஷர்மின் அன்சாரி, சந்தீப் கெய்க்வாட், விவேக் கதம் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.