சுப்ரியா சுலேவின் மார்பிங் செய்த படத்தை பரப்பியதாக ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

சுப்ரியா சுலேவின் மார்பிங் செய்த படத்தை பரப்பியதாக ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Sept 2022 11:30 AM IST (Updated: 25 Sept 2022 11:30 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரியா சுலேவின் மார்பிங் செய்த படத்தை பரப்பிய ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

சுப்ரியா சுலேவின் மார்பிங் செய்த படத்தை பரப்பிய ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

முதல்-மந்திரி இருக்கை விவகாரம்

ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. அவரது தந்தையும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவின் இருக்கையில் உட்கார்ந்து இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட படம் ஏக்நாத் ஷிண்டேவின் தனிப்பட்ட அலுவலகத்தில் எடுக்கப்பட்டது என அந்த விவகாரம் குறித்து ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே முதல்-மந்திரிக்கான இருக்கையில் உட்கார்ந்து இருப்பது போன்ற படத்தை ஏக்நாத் ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் சீத்தல் மாத்ரே டுவிட்டரில் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்பிங் படம்

இந்தநிலையில் சுப்ரியா சுலே முதல்-மந்திரி இருக்கையில் உட்கார்ந்து இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட படத்தை சீத்தல் மாத்ரே பரப்பியதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் அவர்கள் மார்பிங் செய்யப்பட்ட படத்தை பரப்பிய சீத்தல் மாத்ரே மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Next Story