சிவில் சர்வீசஸ் தேர்வில் மும்பை கல்லூரியில் படித்த மாணவருக்கு 149-வது இடம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் மும்பை கல்லூரியில் படித்த மாணவனுக்கு 149 இடம் கிடைத்துள்ளது.
மும்பை,
சிவில் சர்வீசஸ் தேர்வுவில் மும்பை கல்லூரியில் படித்த மாணவனுக்கு 149 இடம் கிடைத்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு
இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணி அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வை 3 நிலைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் 685 பேர் வெற்றி பெற்று உள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
இதில் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள கில்லர் கிராமத்தை சேர்ந்த சுபம் போசலே 149-வது இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை மாவட்ட பஞ்சாயத்து பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சுபம் போஸ்லே தனது ஆரம்ப கல்வியை சரிசல் மற்றும் போர்பால் கிராமங்களில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து பள்ளிகளில் முடிந்தார்.
பின்னர் அவுசாவில் 5 முதல் 7-ம் வகுப்பு வரையும், லாத்தூரில் 8-ல் இருந்து 10-ம் வகுப்பு வரையும் படித்து முடிந்தார்.
மும்பை கல்லூரியில் படித்தவர்
மேற்படிப்புக்காக மும்பை வந்த அவர், இங்குள்ள கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றார்.
ஏற்கனவே ஒரு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால், டெல்லி சென்று பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிர பயிற்சி பெற்றதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.
இதேபோல லாத்தூர் மாவட்டம் உத்கிர் தாலுகா ஹந்தர்குலி கிராமத்தை சேர்ந்த ராமேஸ்வர் சுதாகர் எனற மாணவர் 202 இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை கடை வைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.