கத்தியால் குத்தி வாலிபர் கொலை; ஒருவர் படுகாயம்-5 பேர் கைது
மைசூரு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மைசூரு:
முன்விரோதம்
மைசூரு டவுன் உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கேத்தமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சிந்து என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. இதில் கடந்த ஆண்டு (2021) இவர்கள் இருவரும் ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ், சிந்துவை கத்தியால் குத்தினார்.
இதில் சிந்து படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த வழக்கில் வெங்கடேசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், அவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். அவரை சிந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கத்திக்குத்து
மேலும் இவர்கள் இருவருக்கும் விநாயகர் சதுர்த்தி அன்று தகராறு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ், தனது நண்பரான நவீன் என்பவரை பாா்ப்பதற்காக கேத்தமாரனஹள்ளி சர்க்கிள் பகுதிக்கு வந்து இருந்தார். அப்போது அங்கு சிந்து தனது நண்பர்களுடன் வந்தார். இதையடுத்து சிந்துவும் அவரது நண்பர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசை சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதைபாா்த்து அதிர்ச்சி வெங்கடேசின் நண்பர் நவீன், அவர்களை தடுக்க முயன்றார். அப்போது நவீனையும் அவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில பயங்கர கத்தி குத்து காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கீேழ விழுந்தனர். இதைபாா்த்த சிந்து மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து கத்திகுத்து காயம் அடைந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மைசூரு கே.ஆர் ஆஸ்பத்திரியில் சோ்த்தனர்.
5 பேர் கைது
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து உதயகிரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட சிந்து உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.