மெக்கானிக் கொலையில் வாலிபர் கைது: மனைவிக்கு தொல்லை கொடுத்ததால் தீர்த்து கட்டினார்


மெக்கானிக் கொலையில் வாலிபர் கைது: மனைவிக்கு தொல்லை கொடுத்ததால் தீர்த்து கட்டினார்
x

மெக்கானி்க் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


பெங்களூரு:

பெங்களூரு சிவாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெசான்(வயது 25). இவரது மனைவி சிம்ரன். கடந்த 8 மாதங்களாக இந்த தம்பதி சிவாஜிநகரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி ஜெசான் வீட்டுக்கு, சிவாஜிநகரை சேர்ந்த மெக்கானிக்கான ஜாவேத்கான்(25) என்பவர் சென்றிருந்தார். அப்போது அங்கு வைத்து ஜெசான், ஜாவேத் கான் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ஆத்திரமடைந்த ஜெசான் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து ஜாவேத்கானை குத்தி கொலை செய்தார்.இதுகுறித்து சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெசானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஜெசானுக்கும், ஜாவேத்கானுக்கும் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெசான் வீட்டுக்கு, ஜாவேத்கான் சென்று வந்துள்ளார். அப்போது சிம்ரனுடன் அவர் நெருங்கி பழக முயன்றதாகவும், தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஜாவேத்கான் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. விசாரணைக்கு பின்பு ஜெசான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story