ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தை இறுக்கி சிறுமி பலி


ஊஞ்சல் கட்டி விளையாடியபோது  கழுத்தை இறுக்கி சிறுமி பலி
x

ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தை இறுக்கி சிறுமி இறந்தார்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா அனந்தபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சந்திராவதி. இவர்களது மகள் லிகிதா(வயது 11). இந்த சிறுமி பாப்பனகத்தே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலையில் சேகரும், சந்திராவதியும் வெளியே சென்றிருந்தார்கள். வீட்டில் சிறுமி லிகிதா மட்டும் தனியாக இருந்தாள்.

இந்த நிலையில் சிறுமி லிகிதா சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி லிகிதா கழுத்தை இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுபற்றி பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story