உடுப்பி; ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை


உடுப்பி; ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடுப்பி-

உடுப்பி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்

உடுப்பி மாவட்டம் டவுன் அருகே உள்ள ஹொலக்காடு பகுதியை சேர்ந்தவர் சதானந்தா குந்தார் (வயது65). இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். சதானந்தா குந்தார் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவர் உடுப்பி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய வங்கிகளில் பணியாற்றி உள்ளார். சதானந்தா குந்தார் ஓய்வு பெற்ற பின்னர் படகபெட்டு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சதானந்தா குந்தாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தனிமையில் இருந்ததால் தினமும் மது அருந்தி கொண்டு வந்துள்ளார். இதனால் தன்னை கவனிக்க ஆட்கள் யாரும் இல்லை என புலம்பி கொண்டே சதானந்தா குந்தார் வந்துள்ளார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சதாந்தா குந்தார் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் வந்து பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் கிணற்றில் குதித்து சதானந்தா குந்தாரை பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக உடுப்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதானந்தா குந்தார் எதற்காக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story