Normal
குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் பலி
ராய்ச்சூருவில் குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் யரகேரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் முஸ்தகின் (வயது 18). அதே கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் மகள் தானாஜ் (15). இந்த சிறுமியும், முஸ்தகினும் நேற்று மதியம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றாா்கள்.
குளத்தில் இறங்கி குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு 2 பேரும் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேம் குளத்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்கள். பின்னர் குளத்து தண்ணீரில் மூழ்கி முஷ்தகினும், தானாஜிம் பரிதாபமாக இறந்து விட்டனர். இதுகுறித்து யரகேரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story