மைசூருவில் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி


மைசூருவில் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழா நிறைவு: மைசூருவில் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி

மைசூரு:

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த விழாவை கன்னட இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். முதல்-மந்திரி சித்தராமையா தசரா விழாவை நிறைவு செய்தார். ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.அவர்கள் யானைகளின் அணிவகுப்பு ஊர்வலத்தை கண்டு ரசித்தனர்.

இதனை காண ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் குவிந்ததால் மைசூரு நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் வாகனங்கள் நிரம்பி இருந்தன. இதனால் மைசூரு நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்தநிலையில், மின்விளக்கு அலங்காரம் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் இருக்கிறது.

மேலும் இன்று (வியாழக்கிழமை) சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீவரி அம்மன் கோவிலில் ரத உற்சவம் நடக்கிறது. இதனை காண நேற்று இருந்தே கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. தசரா விழாவை காண வந்த சுற்றுலா பயணிகள் பிற மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் மைசூருவில் 2 நாட்களாக வாகன நெரிசல் இருந்து வருகிறது. அவ்வாறு மைசூரு வரும் சுற்றுலா பயணிகள் மின்விளக்கு அலங்காரத்தை கண்டு ரசிக்கிறார்கள். மேலும், அவர்கள் மின்விளக்கு அலங்காரம் முன்பு செல்பி, புகைப்படம் எடுத்து செல்கிறார்கள். தசரா விழா முடிந்தாலும் மைசூரு நகரில் பொதுமக்கள் கூட்டம் குறையவில்லை. மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


Next Story