கர்நாடகத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யபோலீசார் கன்னடத்திலேயே பேச வேண்டும்


கர்நாடகத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யபோலீசார் கன்னடத்திலேயே பேச வேண்டும்
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

. கர்நாடகத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்ய போலீசார் அனைவரும் கன்னடத்திலேயே பேச வேண்டும் என்று போலீஸ் ஐ.ஜி. பிரதாப் முகந்தி கூறினார்

கோலார் தங்கவயல்:

கர்நாடகத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்ய போலீசார் அனைவரும் கன்னடத்திலேயே பேச வேண்டும் என்று போலீஸ் ஐ.ஜி. பிரதாப் முகந்தி கூறினார்.

அணிவகுப்பு மரியாதை

கோலார்(மாவட்டம்) டவுனுக்கு நேற்று கர்நாடக மாநில ஆயுதப்படை ஐ.ஜி. பிரதாப் முகந்தி வந்தார். அவர் கோலார் டவுனில் உள்ள போலீஸ் மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் பெண் போலீஸ், மோப்ப நாய் பிரிவு, மாவட்ட ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர்.

போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்ட பின்னர் ஐ.ஜி. பிரதாப் முகந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாடுபட வேண்டும்

நாம் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், நாம் பணியாற்றும் மாநிலத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். அதேபோல் அந்த மாநில பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும், மாநில மொழியின் மேம்பாட்டுக்காகவும் நாம் பாடுபட வேண்டும்.

நாம் பணியாற்றும் மாநிலத்தின் நம்பிக்கைக்கும், மக்களின் விசுவாசத்திற்கும் பாத்திரமாக செயல்பட வேண்டும். இதை யாரும் மறக்க கூடாது. கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் நாம் ஒவ்வொருவரும் சம்பளம் பெறுகிறோம். அதை கவனத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டியது அவசியம்.

நன்றிக்கடன்

கர்நாடக மாநிலத்திற்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் கன்னடத்தில் நாம்(போலீசார்) பேசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்கள், போலீஸ் தரப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, உயர் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது கன்னடத்திலேயே பேச வேண்டும். இதுவே நாம் பணியாற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செய்யும் நன்றிக்கடன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story