அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது


அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது
x

சிக்பள்ளாப்பூரில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சீனிவாசப்பூர், மரலேனஹள்ளி, கமலூர், சிரவாரா, அந்தரஹள்ளி மற்றும் கோலார் புறநகர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனிவாசப்பூர் அருகே ஹரீஷ் என்பவரின் பண்ணை தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு வளர்ப்பு நாயை வேட்டையாடி கொன்றது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இதுபற்றி அறிந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கோலார் பிளாண்டேசன் அருகே ஒரு தோட்டத்தில் இரும்பு கூண்டையும், அதனுள் ஒரு நாயையும் கட்டி வைத்திருந்தனர். நேற்று அதிகாலையில் அந்த நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை, இரும்பு கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அந்த சிறுத்தையை கூண்டுடன் வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.


Next Story