சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும்


சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும்
x

காவிரி விவகாரத்தில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் நீர் பாதுகாப்பு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு:-

தமிழக அரசு தீர்மானம்

காவிரியில் தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக நீா் பாதுகாப்பு குழு தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி கடிதம் கொடுத்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு குருபூர் சாந்தகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி உறுதி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டவில்லை. நாங்கள் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து பேசியபோது, இதுகுறித்து எடுத்துக் கூறினோம். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக முதல்-மந்திரி உறுதியளித்தார். ஆனால் இதுவரை சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டவில்லை. அதனால் நாங்கள் கவர்னரை நேரில் சந்தித்து, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினோம்" என்றார்.


Next Story