மைசூரு பிரியப்பட்டணாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை


மைசூரு பிரியப்பட்டணாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு:

மதிப்பெண் குறைவு

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பேகூர் கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(வயது 17). இவர் பிரியப்பட்டணாவில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தீபிகா கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அப்போது தீபிகா அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிகையில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது. அதில் தீபிகா 509 மதிப்பெண் மட்டுமே பெற்றோர். இந்த மதிப்பெண் முதல் வகுப்புதான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தீபிகாவிற்கு மன நிம்மதி இல்லை. இதனால் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் தோழிகளிடம் அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வெளியே சென்றிருந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, தீபிகா தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பிரியப்பட்டணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பிரியப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story