மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்கு


மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்கு
x

பெங்களூருவில் மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சந்திரா லே-அவுட் மூடலபாளையா பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் மாதேஷ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சரியாக வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த மாணவனை ஆசிரியர் மாதேஷ் கன்னத்தில் அறைந்ததோடு, கம்பால் அடித்ததாக தொிகிறது. இதில் அந்த மாணவனின் கண் பகுதியில் பலத்த காயம் உண்டானது.

அந்த மாணவனை பெற்றோர் சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சந்திரா லே-அவுட் போலீசார், ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.


Next Story