சித்தராமையா பிறந்த நாள் விழா: காங்கிரசார் கடும் அதிருப்தி- பா.ஜனதா சொல்கிறது
சித்தராமையா பிறந்த நாள் விழாவிற்கு காங்கிரசார் கடும் அதிருப்தியில் இருப்பதாக பாஜனதா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளை சித்தராமோற்சவா என்ற பெயரில் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அருவெறுப்பு மற்றும் சகிப்பின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. வேறு கட்சியில் இருந்து வந்த சித்தராமையாவை ஆராதிக்கிறார்கள். அதனால் அடிப்படை காங்கிரஸ்காரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் யார்-யார் உள்ளனர் என்பதை மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறியுள்ளார். இது சித்தராமையாவுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையா? அல்லது இவ்வளவு போட்டியில் உள்ளனர் என்று அவருக்கு கூறிய தகவலா?.
இவ்வாறு பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story