தொழில்அதிபர் வீட்டில் ரூ.8 கோடி பறிமுதல்


தொழில்அதிபர் வீட்டில் ரூ.8 கோடி பறிமுதல்
x

பெங்களூருவில் வருமான வரி சோதனையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:-

பெங்களூருவில் கடந்த 2 வாரங்களாக முகாமிட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில்அதிபர்கள், நகைக்கடைகள், அரசு காண்டிராக்டர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு காண்டிராக்டர் அம்பிகாவதி வீட்டில் ரூ.42 கோடியும், கட்டிட காண்டிராக்டர் சந்தோஷ் வீட்டில் ரூ.45 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூருவில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வரும் தொழில்அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.8 கோடி சிக்கியது தெரியவந்துள்ளது.

அந்த தொழில்அதிபர் வரி ஏய்ப்பு செய்ததுடன், கணக்கில் காட்டாமல் ரூ.8 கோடியை வீடு மற்றும் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரூ.8 கோடியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். பணம் சிக்கியது குறித்து தொழிலஅதிபரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story