சமூக வலைத்தள குழுவில் காதலி ஆபாச படங்கள் வெளியீடு


சமூக வலைத்தள குழுவில் காதலி  ஆபாச படங்கள் வெளியீடு
x

சமூக வலைத்தள குழுவில் காதலி உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

காதல் ஜோடி

தமிழ்நாடு வேலூரை சேர்ந்தவர் அஞ்ஜெய்(வயது 26). இவர் பெங்களூருவில் தங்கியிருந்து கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அப்போது வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு வாலிபரின் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

மேலும் விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் டெலிகிராம் என்னும் சமூக வலைத்தளத்தில் அஞ்ஜெயின் காதலியான இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு இருந்தன. அந்த புகைப்படம் குறித்து இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.

போலீசில் புகார்

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது காதலனிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார். பின்னர் இளம்பெண் மற்றும் காதலன் இருவரும் சேர்ந்து பெங்களூரு போலீசில் புகார் அளித்தனர்.

மேலும் இதனை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரினர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சமூக வலைத்தளங்களில் வைரலான இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை, அவரது காதலனே வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்

இதையடுத்து அவரது காதலனை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது காதலியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டதை ஒப்புக்கொண்டார். அதாவது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டெலிகிராமில் பல குழுக்களை தொடங்கி உள்ளார். பின்னர் அந்த குழுக்களில் அவர் உள்பட அவரது நண்பர்கள் பலரும் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டிருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அந்த புகைப்படங்களை பார்த்து சிலர் பதிவிடும் ஆபாச கருத்துக்களை அஞ்ஜெய் வாசித்து வந்ததுடன் பதில் கருத்தையும் பதிவிட்டு வந்துள்ளார்.

செயலி உருவாக்கி

ஆபாசமாக சித்தரிப்பு அத்துடன் இளம்பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரிக்க அஞ்ஜெய் ஒரு செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் சாதாரணமாக பதிவேற்றம் செய்யப்படும் படம், நிர்வாண புகைப்படமாக மாறிவிடும்.

இவ்வாறு பல பெண்களை திருட்டு தனமாக படம் பிடித்ததுடன், சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களின் படங்களை எடுத்தும், ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அஞ்ஜெயை போலீசார் கைது செய்தனர். கைதான அஞ்ஜெயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story