சர்வர் பிரச்சினையால் உதவி தொகை பெறுவதில் சிக்கல்


சர்வர் பிரச்சினையால் உதவி தொகை பெறுவதில் சிக்கல்
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் சர்வர் பிரச்சினையால் உதவி தொகை பெறுவதில் சிக்கல் நடவடிக்கை எடுக்கும்படி பயனாளிகள் கோரிக்கை

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் தபால் அலுவலகங்களில் சர்வர் பிரச்சினையால் உதவி தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த பயனாளிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சர்வர் பிரச்சினை

கோலார் தங்கவயல், கேசம்பள்ளி, பேத்தமங்களா ஆகிய பகுதிகளில் முதியோர் உதவி தொகை, பெண்கள் மற்றும் விதவைகளுக்கான உதவி தொகைகள் பெறும் பயனாளிகள் உள்ளனர். இவர்கள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் அந்த உதவி தொகைகளை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 2 மாதமாக தபால் அலுவலகம் மூலம் இந்த உதவி தொகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதாவது சர்வர் பிரச்சினையால் இந்த உதவி தொகைகள் பெற முடியாமல் போய்விடுவதாக கூறப்படுகிறது.

இந்த உதவி தொகைகளை பெறுவதற்காக பல கிலோ மீட்டர் தூரம் மக்கள் பயணித்து வருகிறார்கள்.

திடீரென்று சர்வர் பிரச்சினை என்று கூறி உதவி தொகைகளை பெற முடியாமல் போனதால் பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்துள்ள பயனாளிகள் இந்த சர்வர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தடையின்றி உதவி தொகை கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று தபால் அலுவலக ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அதற்கு தபால் அலுவலக ஊழியர்கள் இது எங்களுடைய பிரச்சினை இல்லை.

சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கைவிரித்துவிட்டனர்.

நடவடிக்கைஎடுக்கவேண்டும்

இந்த சர்வர் பிரச்சினையை தபால் அலுவலக அதிகாரிகள் சரி செய்தால் மட்டுமே உதவி தொகை பெற முடியும். இல்லையென்றால் இதே நிலைதான் நீடிக்கும் என்று கூறினர்.

ஆனால் இந்த பதிலை பயனாளிகள் ஏற்கவில்லை.

அது எப்படி வங்கிகளில் மட்டும் சர்வர் சரியாக வேலை செய்கிறது. தபால் அலுவலகங்களில் வேலை செய்வது இல்லை.

இது வேண்டுமென்றே செய்யப்படும் தாமதம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் தீவிரப்போராட்டம் நடத்தப்படும் என்று பயனாளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story