பெங்களூருவில் இன்றும், நாளையும் மின்தடை
பெங்களூருவில் சில இடங்களில் இன்றும், நாளையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெஸ்காம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெஸ்காம் சார்பில் மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 23-ந் தேதி(அதாவது இன்று) பெங்களூரு கே.எஸ்.ஐ.டி. கல்லூரி, அஞ்சனபுரா 8-வது பிளாக், புரவங்கரா குடியிருப்பு, அம்ரித்நகர், வட்டரபாளையா, கெம்படஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
இதுபோல 24-ந் தேதி(நாளை) இஸ்ரோ லே-அவுட், இஸ்ரோ லே-அவுட் தொழிற்பேட்டை பகுதி, குமாரசாமி லே-அவுட், விட்டல்நகர், விக்ரம்நகர், எலச்சனஹள்ளி, சுங்கதகட்டே, காமாட்சிபாளையா, மல்லத்தஹள்ளி, ஹெக்கனஹள்ளி, அன்னபூர்னேஸ்வரிநகர், கெங்குண்டே, கொட்டிகேபாளையா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
இவ்வாறு பெஸ்காம் கூறியுள்ளது.