பிரதமர் மோடி வருகையால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம்-நளின்குமார் கட்டீல் பேட்டி
பிரதமர் மோடியின் வருகையால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்று நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமர் மோடி ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் மோடி வருகையால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். புதிய திட்டங்களால் கர்நாடகம் வளர்ச்சியின் புதிய பாதையில் பயணிக்கும். யோகா பயிற்சி செய்வதன் மூலம் சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று மோடி கூறியுள்ளார்.
மைசூருவில் நாளை (இன்று) நடைபெறும் உலக யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் எங்கள் கட்சி நிர்வாகிகள் வரும் நாட்களில் கட்சியை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றுவார்கள். கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் நான் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.