தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு; மந்திரி கோவிந்த் கார்ஜோள் தகவல்


தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு; மந்திரி கோவிந்த் கார்ஜோள் தகவல்
x

தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கலபுரகி, விஜயாப்புரா, விஜயநகர், ராய்ச்சூர், தாவணகெரே, பாகல்கோட்டை, பல்லாரி, யாதகிரி, கொப்பல் ஆகிய 9 மாவட்டங்களில் சுமார் 1,500 தேவதாசி பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு கர்நாடக அரசு மாதந்தோறும் உதவித்தொகையாக தலா ரூ.1,500 வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை கடந்த 5 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கர்நாடகத்தில் தேவதாசி பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக தலா ரூ.1,500 வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story