தசரா விழாவையொட்டி புத்தக கண்காட்சி இன்று முதல் தொடக்கம்
மைசூரு தசரா விழாவையொட்டி புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கப்படுகிறது. வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.
மைசூரு
தசரா விழா
மைசூரு தசரா விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவையொட்டி புத்தக கண்காட்சி மேளா இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. மைசூரு பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள ஓவல் கிரவுண்ட் மைதானத்தில் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த விழாவை கன்னட மற்றும் கலாசாரத்துறை, கன்னட புத்தக வாரியம் ,மைசூரு தசரா மகோத்சவம் கமிட்டி சார்பில் 2023-ம் ஆண்டு புத்தக கண்காட்சி மேளா மேற்கொண்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை மாலை 5 மணி அளவில் கலாசாரத்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சி மேளா மற்றும் புத்தகங்களை வாங்குவதற்கு தினமும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வருவார்கள்.
கண்காட்சி நடைபெறும் பகுதியில் தினமும் கலாசார நிகழ்ச்சிகள் நாட்டுப் புறப்பாட்டு, நகைச்சுவை, நடனம், பாட்டு கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சிற்பக்கலை
கடைசி நாளில் ராகவேந்திர குலகரணி, கர்நாடக மாநிலத்தில் சிற்பக்கலை வடிவமைப்புகள் மற்றும் அந்த கலை பற்றி உபன்யாசம் நடக்கிறது. இந்த தசரா விழாவை முன்னிட்டு பிள்ளைகளுக்காக அவர்களது கலை காட்டுவதற்காக "பிள்ளைகள் தசரா" நிகழ்ச்சி ஜெகன்மோகன் அரண்மனையில் ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகள் வெளிப்படுத்தி கொள்ளலாம்.
இந்த பிள்ளைகள் தசரா விழா 17, 18-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. பிள்ளைகள் கோலம் போடும் போட்டி, கவிஞர் கோஷ்டி நடத்தும் நிகழ்ச்சி, வரைபடம் எழுதும் போட்டி, நகைச்சுவை காவியம், வசனம், சாகித்ய போன்றவர்களை உருவாக்கி மேடையில் படிக்கும் மற்றும் நடிப்பு காட்சிகள் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிள்ளைகள் தசரா விழாவை கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா தொடங்கி வைக்கிறார்.