விஜயாப்புரா அருகே, கார்கள் மீது அரசு பஸ் மோதல்:பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலி


விஜயாப்புரா அருகே, கார்கள் மீது அரசு பஸ் மோதல்:பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலி
x

விஜயாப்புரா அருகே கார்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.

விஜயாப்புரா:

கார்கள் மீது பஸ் மோதியது

விஜயாப்புரா மாவட்டம் கோல்காரா தாலுகா குப்பஹட்டி கிராஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 கார்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சை 2 கார்களும் முந்தி செல்ல முயன்றன. அப்போது டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 2 கார்கள் மீதும் மோதியது.

இதில் ஒரு காரில் பயணித்த குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். இன்னொரு காரில் பயணித்த குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் கோல்காரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுபோல உயிரிழந்த குழந்தை உள்பட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கலபுரகியை சேர்ந்த சரணம்மா பசவராஜ்(வயது 55), அவரது மருமகள் சுனந்தா மல்லிகார்ஜூனா(25), சுனந்தாவின் 3 மாத ஆண் குழந்தை சுமன் என்பது தெரியவந்தது.

படுகாயம் அடைந்தவர்கள் விஜயாப்புராவை சேர்ந்த உமேஷ், அவரது மனைவி சுரேகா, மகள் சான்வி(2), மகன் சுகான்(8 மாதம்) என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கோல்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் விஜயாப்புரா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story