வியாபாரி அடித்து கொலை: 4 பேருக்கு போலீஸ் வலை


வியாபாரி அடித்து கொலை: 4 பேருக்கு போலீஸ் வலை
x

பெங்களூரு சிட்டிமார்க்கெட்டில் வியாபாரியை கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு ஆனேபாளையாவை சேர்ந்தவர் சையத் மன்சூர் அகமது (வயது 42), வியாபாரி. இவர், பி.டி.தெருவில் கடை வைத்து நடத்தினார். இக்பால் என்பவரிடம் சையத் மன்சூர் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் திரும்ப கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. பணத்தை திரும்ப கொடுக்கும்படி கூறி சையத் மன்சூருக்கு, இக்பால் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சையத் மன்சூரை சந்தித்து பணத்தை வாங்குவதற்காக, இக்பால் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்றார். அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த இக்பால் உள்பட 4 பேர், சையத் மன்சூரை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சையத் மன்சூர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிட்டி மார்க்கெட் போலீசார் தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story