கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்; உயர்கல்வித்துறை மந்திரி தகவல்


கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்; உயர்கல்வித்துறை மந்திரி தகவல்
x

மைசூருவில் உள்ள கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளதாக உயர்கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் விதிகளின்படி தொலைதூர கல்வி வழங்க தகுதி பெற்ற ஒரே நிறுவனம் கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம் தான். மைசூருவில் உள்ள கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த படிப்புக்கு மல்லேசுவரத்தில் உள்ள மகிளா மண்டல மையத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி மாணவர்கள் சேர்க்கையை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க www.ksoumysuru.ac.in என்ற இணையதள முகவரியை பார்த்து கொள்ளலாம்.

பி.பி.எல். ரேஷன் அட்டை பயன்படுத்தும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், ஆட்டோ, கார் டிரைவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள், திருநங்கைகள், மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story