பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பெண்ணிடம் தங்கச்சங்கலி பறித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா பலேமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புட்டம்மா.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி புட்டம்மா , வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் அமர்ந்து பாத்திரம் கழுவி கொண்டிருந்தார். அப்போது திம்மலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயாநாயக்(வயது 23) என்பவர் புட்டம்மாவின் பின்புறமாக நைசாக வந்து அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து புட்டம்மா தரப்பில் அளித்த புகாரின் பேரில் பத்ராவதி பேப்பர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயா நாயக்கை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தி நீதிபதி சசிதர் தீர்ப்பு கூறினார். அதில் பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த ஜெயாநாயக்குக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.