மைசூரு டவுனில் ரூ. 3 லட்சம் தடைசெய்யப்பட்ட பாலீதின் பைகள் பறிமுதல்


மைசூரு டவுனில்  ரூ. 3 லட்சம் தடைசெய்யப்பட்ட பாலீதின் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

மைசூரு டவுனில் ரூ. 3 லட்சம் தடைசெய்யப்பட்ட பாலீதின் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மைசூரு

மைசூரு டவுன் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பாலீதின் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மைசூரு டவுன் சிவராம பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் பாலீதின் பைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட டம்ளர், தட்டு, கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இ்ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 3 லட்சம் மதி்ப்பிலான பாலீதின், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சில கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பாலீதின், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story