ஹாசனில், 421 வீடுகள் சேதம்; 224 ஹெக்டேர் விளை நிலங்கள் நாசம்


ஹாசனில், 421 வீடுகள் சேதம்;  224 ஹெக்டேர் விளை நிலங்கள் நாசம்
x

கனமழைக்கு, ஹாசன் மாவட்டத்தில் 421 வீடுகள் சேதமடைந்துள்ளதாவும், 224 ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகி உள்ளதாகவும் கலெக்டர் கிரீஷ் தெரிவித்துள்ளார்.

ஹாசன்;

கனமழை

ஹாசன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் கனமழைக்கு சாலைகள், ேமம்பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரீஷ் மழை பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

421 வீடுகள் சேதம்

தென்மேற்கு பருவ மழையால் மாவட்டத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளது. அதன்படி முதற்கட்ட ஆய்வில் 421 வீடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றில் 28 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.

அதேபோல் மழைவெள்ளம் புகுந்து 224 ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். கனமழை பாதிப்பை தடுக்க ஹாசன் மாவட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story