சிவமொக்காவில் இருந்து ஐதராபாத், திருப்பதிக்கு விமான சேவை


சிவமொக்காவில் இருந்து ஐதராபாத், திருப்பதிக்கு விமான சேவை
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் இருந்து நவம்பர் 17-ந் தேதி முதல் ஐதராபாத், திருப்பதி, கோவாவிற்கு விமான சேவை தொடங்கப்படுகிறது.

சிவமொக்கா:-

விமான சேவை தொடக்கம்

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ளது சோகானே விமான நிலையம். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த விமான நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த விமான நிலையம் பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் சில தனியார் நிறுவனங்கள் சோகானேவில் இருந்து விமானங்களை இயக்க முன் வந்துள்ளது.

அதன்படி தற்போது ஸ்டார் ஏர் நிறுவனத்தை சேர்ந்த விமானத்தை சிவமொக்காவில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வாரத்திற்கு 6 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமான சேவை நவம்பர் 17-ந் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஐராபாத்தில் இருந்து சிவமொக்காவிற்கு இந்த விமானங்கள் இயக்கப்படுகிறது.

6 நாட்கள் இயக்கப்படும்

அதன்படி ஐதராபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் விமானம் 10.30 மணிக்கு சிவமொக்காவை வந்தடையும். அதேபோல சிவமொக்காவில் இருந்து 11.00 மணிக்கு புறப்படும் விமானம் 12 மணிக்கு திருப்பதியை சென்றடைகிறது. பின்னர் மதியம் 12.30 மணிக்கு திருப்பதியில் இருந்து வரும் விமானம் மதியம் 1.45 மணிக்கு சிவமொக்காவிற்கு வந்தடைகிறது.

இதேபோல சிவமொக்காவில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 3.15 மணிக்கு சிவமொக்காவை சென்றடையும். இவ்வாறு வாரத்திற்கு 6 முறை சிவமொக்காவில் இருந்து வெளி மாநிலத்திற்கு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டும் இந்த விமான சேவை இருக்காது என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story