பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ் காங்கிரசில் இணைந்தார்
பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ் காங்கிரசில் இணைந்தார்.
பெங்களூரு -
பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ் காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரசில் இணைந்தார்
பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ். இவர், பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்தார். இதற்காக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசி இருந்தார். இதற்கு டி.கே.சிவக்குமாரும் அனுமதி வழங்கி இருந்தார். இதையடுத்து, பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று பூர்ணிமா சீனிவாஸ், அவரது கணவர் பி.டி.சீனிவாஸ் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில் பூர்ணிமா சீனிவாஸ் காங்கிரசில் இணைந்தார். இதுபோல், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் நரசிம்ம நாயக்கும் நேற்று காங்கிரசில் சேர்ந்தார்.
கட்சிக்கு துரோகம்
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
பூர்ணிமா சீனிவாசின் தந்தை ஏ.கிருஷ்ணப்பா காங்கிரசில் இருந்து விலக, நானும் சிறிய காரணமாக இருந்தேன். 2013-ம் ஆண்டு ஏ.கிருஷ்ணப்பாவுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்க முடியாமல் போனது. ஏ.கிருஷ்ணப்பாவுக்கு அநியாயம் ஏற்பட்டு இருந்தது. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற பைரதி பசவராஜிக்கு அந்த தேர்தலில் சீட் கிடைத்தது.
பூர்ணிமா இரியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். இனிமேல் பூர்ணிமாவுக்கு காங்கிரசில் அநியாயம் ஏற்பட விடமாட்டேன். பா.ஜனதா சாதி மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரு கட்சி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.