விவசாயிகள் தசரா விழாவையொட்டிமாட்டுவண்டி ஊர்வல


விவசாயிகள் தசரா விழாவையொட்டிமாட்டுவண்டி ஊர்வல
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தசரா விழாவையொட்டி மாட்டு வண்டி ஊர்வலத்தை மந்திரி செலுவராயசாமி தொடங்கி வைத்தார்.

மைசூரு:

விவசாயிகள் தசரா விழாவையொட்டி மாட்டு வண்டி ஊர்வலத்தை மந்திரி செலுவராயசாமி தொடங்கி வைத்தார்.

மாட்டுவண்டி ஊர்வலம்

மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தசரா விழாவில் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுயுள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தசரா விழாவை காண வந்து செல்கிறார்கள். தசரா விழாவையொட்டி மலர்கண்காட்சி, சைக்கிள் பேரணி, யோகா போட்டி, இளைஞர் தசரா, குழந்தைகள் தசரா, போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் விவசாயிகள் தசரா விழா நேற்று தொடங்கியது. இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி, மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், விவசாய சங்க முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி ஊர்வலத்தில் மந்திரி செலுவராயசாமி கலந்து கொண்டார். ஊர்வலம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து மைசூரு ரெயில் அருகே உள்ள ஜே.கே. மைதானம் வரை நடந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளையாட்டி போட்டி

இதையடுத்து, விவசாய கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை கால்நடைத்துறை மந்திரி கே.வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த விழாவில் பெண் விவசாயிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேலும் விவசாய கண்காட்சியில் விவசாய சம்பந்தமான பொருட்கள், எந்திரங்கள், உரங்கள், ஆடு, மாடு, சிறு தானியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது.

பிளாட்டினம் சபா அறையில் நடந்த விவசாய தசரா நிகழ்ச்சியில் விவசாயம், மீன் வளர்ப்பு, தோட்டக்கலை, கால்நடைகளை வளர்த்து பாலூட்டி அதிக லாபம் பெற்றிருக்கும் விவசாயிகள் பாராட்டு கவுரவிக்கப்பட்டனர். மேலும், எந்த காலங்களில் என்னென்ன விவசாயம் செய்ய வேண்டும்.எப்படி லாபம் பெற வேண்டும்.

விழிப்புணர்வு

அதற்காக எந்தெந்த வகைகளை அனுசரிக்க வேண்டும். எந்த விளைச்சல் வளர்ந்தால் லாபம் கிடைக்கும். என விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகள் முன்னேற்றத்திற்கு, அவர்கள் சுயமாக முன்னேற்ற அடைவதற்கு மாநில அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு நல்ல முறையில் விவசாயம் செய்து லாபம் பெற்று வளர்ச்சி அடையலாம்.

விவசாயிகளுக்கு, பெண் விவசாயிகள், அவரது குழந்தைகளுக்கு ஜே.கே. மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) பால் கறக்கும்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாலை 6 மணிக்கு நடக்கிறது. இவ்வாறு மந்திரி கூறினார்.

------------------------------


Next Story