சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டிடங்கள்


சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டிடங்கள்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்கன்வாடி கட்டிடம்

கோலார் தங்கவயல் தாலுகா முழுவதும் 185-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையங்களில் ஏராளமான ஏழை குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவிற்காக ஏராளமான ஏழை பெற்றோர் தங்கள் குழந்தைகள் அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஆனால் அந்த குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அதாவது குழந்தைகள் படித்து வரும் பெரும்பாலான அங்கன்வாடி கட்டிடங்கள் சிதிலமடைந்து இடிந்து விழும்நிைலயில் உள்ளது.

இந்த கட்டிடங்கள் அனைத்து தனியாருக்கு சொந்தமான கட்டிடம் என்று கூறப்படுகிறது. அதாவது கோலார் தங்கவயல் தாலுகாவில் உள்ள பெரும்பாலான அங்கன்வாடி கட்டிடங்கள் இடிந்துவிட்டன. இதனால் வாடகை கட்டிடங்களில் இந்த அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தது. குழந்தைகள் குறைவாக வருவதால், இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை யாரும் பெரிதாக கருதவில்லை.

இடிந்து விழும் அபாயம்

இதனால் கட்டிடங்கள் எளிதில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரம் அந்த கட்டிடங்கள் குழந்தைகள் மீது விழும் என்பது தெரியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் தற்போது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு முன்வருவதில்லை என்றார். குறிப்பாக கோலார் தங்கவயல் தாலுகாவில் மட்டும் 75 கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து உரிமையாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும், அவர்கள் கட்டிடத்தை புதுப்பிக்க முன் வருவது இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளனர். சிதிலமடைந்தது கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கோலார் தங்கவயலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story