கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு


கட்டிடத்தில் இருந்து  தவறி விழுந்து வாலிபர் சாவு
x

பெங்களூருவில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு பீனியா எஸ்.ஆர்.எஸ். சர்க்கிள் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் 3 வாலிபர்கள் சேர்ந்து கஞ்சா போதையில் சுற்றித்திரிந்தனர். இதுபற்றி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஆர்.எஸ். சர்க்கிள் பகுதிக்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்த கட்டிடத்தில் ஏறினார். ஆனால் அவர் கால்தவறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அந்த வாலிபர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ரவி (வயது 26) என்பது தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story