'தினத்தந்தி'புகார் பெட்டி
ஊர் பலகையை மறைத்து இருக்கும் மரக்கிளை
ஊர் பலகையை மறைத்து இருக்கும் மரக்கிளை
பெங்களூருவில் உள்ள சாலைகளில் ஊர்களின் பெயர்களை குறிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு சாலைகளில் ஊர் பலகையை மரக்கிளைகள் மறைத்து உள்ளது. அதுபோல ஹூடி ஐ.டி.பி.எல். சாலையிலும் ஊர் பலகையை மறைக்கும் வகையில் மரக்கிளை வளர்ந்து உள்ளது. இதனால் தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அந்த பலகையில் இருக்கும் ஊர்கள் பெயர் தெரிவது இல்லை. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இதனால் ஊர் பலகையை மறைத்தபடி இருக்கும் மரக்கிளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சதீஷ்ராவ், ஹூடி, பெங்களூரு.
சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்
பெங்களூரு எச்.ஏ.எல். 2-வது ஸ்டேஜ் 12-வது மெயின் ரோட்டில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் உணவு வாங்கி சாப்பிடுகிறாா்கள். அந்த உணவை ஓட்டல்களில் இருந்து பெற்று செல்ல வரும் உணவு விற்பனை பிரதிநிதிகள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கிறார்கள். இதனால் அந்த சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்யன், எச்.ஏ.எல், பெங்களூரு.