கூரியர் நிறுவனத்திற்கு ரூ.47 ஆயிரம் அபராதம்-நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


கூரியர் நிறுவனத்திற்கு ரூ.47 ஆயிரம் அபராதம்-நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x

வாடிக்கையாளர்கள் அனுப்பிய பார்சல்கள் காணாமல் போனதால் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.47 ஆயிரம் அபராதம் விதித்து நூகர்வோர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு நகரில் வசித்து வருபவர் சித்தேஷ். இவரது நண்பருக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ளும்படி சித்தேசுக்கு, அவரது நண்பர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சித்தேசால், ஐதராபாத்திற்கு செல்ல முடியாததால், நண்பரின் திருமணத்திற்காக விலை உயர்ந்த ஆடை மற்றும் பரிசு பொருட்களை பார்சல் செய்து கூரியர் மூலமாக அனுப்பி வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.11,500 ஆகும். ஆனால் சித்தேஷ் அனுப்பிய பொருட்கள், அவரது நண்பருக்கு கிடைக்கவில்லை.

இதுபற்றி கூரியர் நிறுவனத்திடம் கேட்டபோது, பார்சல் காணாமல்போய் விட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி பெங்களூருவில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் கூரியர் நிறுவனத்திற்கு எதிராக சித்தேஷ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை முடிவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சித்தேஷ் அனுப்பிய பார்சல் காணாமல் போக கூரியர் நிறுவனத்தின்அலட்சியமே காரணம் என்பதால், அந்த நிறுவனத்திற்கு ரூ.47 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story