சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய காஸ்மோ பாலிட்டன் கிளப் பூங்கா


சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய காஸ்மோ பாலிட்டன் கிளப் பூங்கா
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய காஸ்மோ பாலிட்டன் கிளப் பூங்கா நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ராபர்ட்சன் பேட்டை கீதா சாலை அமைந்துள்ளது காஸ்மோ பாலிட்டன் கிளப். இது ஆங்கிலேயர் காலம் முதல் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கிளப் அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா கிளப்பிற்கு சொந்தமானது. இந்த பூங்கா அமைவதற்கு முன்பு இங்கு எந்தவிதமான சட்டவிரோத செயல்களும் நடைபெறவில்லை. ஆனால் பூங்கா அமைந்த பின்னர் ஏராளமான சமூகவிரோத செயல்கள் நடைபெற தொடங்கிவிட்டது. அதாவது இரவு நேரங்களில் பூங்காவிற்குள் நுழையும் மர்மநபர்கள், பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் இந்த பூங்காவிற்கு நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தூய்மை செய்யும் பணியில் நகரசபை ஊழியர்கள் ஈடுபட்டாலும், இந்த சமூகவிரோத செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனால் நகரசபையை சேர்ந்த தூய்மை பணியாளர்களே, பூங்காவை கண்டு கொள்ளாமல் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பூங்காவை பராமரிக்க மாவட்ட கலெக்டர் மற்றும் நகரசபைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த பூங்காவிற்கு காவலாளிகள் நியமிக்கவேண்டும். சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்க கூடாது. மேலும் போலீசாரும் இந்த பூங்கா பகுதியில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story