Normal
கட்டிட தொழிலாளி கொலை;2 பேர் கைது
கட்டிட தொழிலாளி கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு ராமமூர்த்திநகர் அருகே முனீஸ்வராநகர் பகுதியில் வசித்து வந்தவர் கேசவரெட்டி. கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார். இதனால் கேசவரெட்டி மாயமானதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் கேசவரெட்டி அவர் வேலை செய்து வந்த கட்டிடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கேசவரெட்டியின் தலையில் கம்பியால் அடித்து மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கொலை தொடர்பாக கட்டிட உரிமையாளர் சீனிவாஸ்ரெட்டி மற்றும் தொழிலாளி சுப்பையா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கட்டிடத்தில் இருந்து மின்மோட்டாரை திருடியதாக கேசவரெட்டியை, 2 பேரும் கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. 2 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story