குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும்


குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:45 AM IST (Updated: 19 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நிகழ்ச்சிகள் மூலம் தான் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும் என மந்திரி மதுபங்காரப்பா கூறினார்.

மைசூரு

மைசூரு தசரா விழா

உலகப்புகழ் ெபற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி, உணவு மேளா, தசரா கண்காட்சி, மல்யுத்த போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவை காண நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில், நேற்று மைசூரு ஜெகன்மோகன் அரண்மனையில் குழந்தைகள் தசரா விழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியை பள்ளி கல்வித்துறை மந்திரி மதுபங்காரப்பா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து குழந்தைகள் இடமும் திறமை சாலித்தனம் உள்ளது. ஆனால் அனைவராலும் அதனை வெளியே கொண்டு வர முடிவதில்லை.

திறமையை வெளியே கொண்டு வர முடியாமல் எத்தனையோ குழந்தைகள் உள்ளன. நிகழ்ச்சிகள் மூலம் தான் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும்.

அரண்மனை வளாகம்

ஜெகன்மோகன் அரண்மனை வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள குழந்தைகள் தயாரித்த பொருட்கள், கலை பொருட்கள், விஞ்ஞான கலை கண்காட்சி ஆகியவை பொதுமக்களை கண்கவரும் வகையில் உள்ளது. சின்ன வயதிலும் குழந்தைகள் சாதனை படைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட திறமைசாலித்தனம் உள்ள குழந்தைகளுடன் இருப்பது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, என்றார். விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா கலந்து கொண்டு பேசுகையில்,குழந்தைகள் தசரா என்பது வெறும் பேசுவதற்கு மட்டுமல்ல.

குழந்தைகள் இடம் உள்ள திறமையை வெளியே கொண்டு வந்து அதனை பாராட்ட வேண்டும். குழந்தைகள் தயாரித்திருக்கும் கலை பொருட்கள் அழகாக உள்ளன. தற்போது உள்ள குழந்தைகளிடம் புவியியல் வளர்ப்பு நன்றாக இருக்கிறது.

குழந்தைகள் தசரா

2 நாட்கள் நடைபெறும் தசரா நிகழ்ச்சியில் குழந்தைகள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும், என்றார்.


Next Story