தர்மபுரி-பெங்களூரு 'மெமு' ரெயில் சேவையில் மாற்றம்; தென்மேற்கு ரெயில்வே தகவல்


தர்மபுரி-பெங்களூரு மெமு ரெயில் சேவையில் மாற்றம்; தென்மேற்கு ரெயில்வே தகவல்
x

தர்மபுரி-பெங்களூரு ‘மெமு’ ரெயில் சேவையில் மாற்றப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு

* தர்மபுரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06278) வருகிற 20-ந்தேதி முதல் தர்மபுரியில் இருந்து காலை 5 மணிக்கு பதிலாக காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு காலை 8.10 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு சென்றடையும்.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-ஓசூர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06261/62) 'மெமு' ரெயில்கள் வருகிற 20-ந்தேதி இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுகிறது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-ராமநகர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு முன்பதிவில்லா 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (01763/64), ேக.எஸ்.ஆர். பெங்களூரு-ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு முன்பதிவில்லா 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (01765/66), ேக.எஸ்.ஆர். பெங்களூரு-குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு முன்பதிவில்லா 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (06529/30), ேக.எஸ்.ஆர். பெங்களூரு-பங்காருபேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு முன்பதிவில்லா 'டெமு' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (01769/70), ேக.எஸ்.ஆர். பெங்களூரு-மைசூரு-கே.எஸ்.ஆர். பெங்களூரு முன்பதிவில்லா 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (06525/26) ஆகிய ரெயில்கள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீண்டும் இயங்குகிறது.

துமகூரு-யஷ்வந்தபுரம்

* துமகூரு-யஷ்வந்தபுரம் முன்பதிவில்லா 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில் (06574) வருகிற 20-ந்தேதி முதல் துமகூருவில் இருந்து தினமும் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்தபுரத்துக்கு காலை 5.40 மணிக்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக யஷ்வந்தபுரம்-துமகூரு முன்பதிவில்லா 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயில் (06579) யஷ்வந்தபுரத்தில் இருந்து தினமும் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு துமகூருவை சென்றடைகிறது.

16 பெட்டிகளாக அதிகரிப்பு

* பங்காருபேட்டை-குப்பம் (06289), குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06292), கே.எஸ்.ஆர். பெங்களூரு-பங்காருபேட்டை (06561), பங்காருபேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு (01773), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிகுப்பம் (01774), மாரிகுப்பம்-பானசவாடி (06562), பானசாவடி-குப்பம் (06291), குப்பம்-பங்காருபேட்டை (06290), பங்காருபேட்டை-மாரிகுப்பம் (01777), மாரிகுப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (01776), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிகுப்பம் (01775), மாரிகுப்பம்-பையப்பனஹள்ளி (01778), பையப்பனஹள்ளி-மாரிகுப்பம் (01779), மாரிகுப்பம்-பங்காருபேட்டை (01780), பங்காருபேட்டை-மாரிகுப்பம் (01782), மாரிகுப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (01772), கே.எஸ்.ஆர். பெங்களூரு-தர்மபுரி (06577), தர்மபுரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06578), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிகுப்பம் (01771), மாரிகுப்பம்-பங்காருபேட்டை (01781), கே.எஸ்.ஆர். பெங்களூரு-தர்மபுரி (06277), தர்மபுரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06278), கே.எஸ்.ஆர். பெங்களூரு-தர்மாவரம் (06595), தர்மாவரம்-கே.எஸ்.ஆர். ெபங்களூரு (06596) ஆகிய 24 'மெமு' ரெயில்கள் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் 6 நாட்கள் இயங்கிய இந்த ரெயில்கள் வாரத்தில் 7 நாட்களும் இயங்க உள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story