கார் மோதி வாலிபர் சாவு
பெங்களூருவில் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு பி.இ.எல். காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவர், ஓலா வாடகை கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் வித்யாரண்யபுரா ரெயில்வே பேரல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் வந்த ஒரு காரும், மனோஜ்குமாரின் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார் தலையில் பலத்தகாயம் அடைந்து இறந்து விட்டார். இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story