சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில் பெங்களூரு-தர்மாவரம் மெமு ரெயில் நிற்காது


சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில்  பெங்களூரு-தர்மாவரம் மெமு ரெயில் நிற்காது
x

சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில் பெங்களூரு-தர்மாவரம் மெமு ரெயில் நிற்காமல் செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில் உயர்தர நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மெமு,டெமு ரெயில்கள் சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில் நிற்காது. அந்த ரெயில்கள் விவரங்கள் பின்வருமாறு:-

பெங்களூரு-தர்மாவரம் மெமு (வண்டி எண் 06595) வருகிற 31-ந் தேதி வரை சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில் நிற்காது. இதேபோல் மறுமார்க்கமாக தர்மாவரம்-பெங்களூரு மெமு (வண்டி எண் 06596), இந்துபூர்-குண்டகல் டெமு (வண்டி எண் 07694),கே.எஸ்.ஆா். பெங்களூரு-ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் மெமு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06515), மறுமார்க்கமாக ஸ்ரீ சத்திய சாய் பிரசாந்தி நிலையம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06516) ஆகியவை வருகிற 31-ந் தேதி வரை சக்கர்லபள்ளி ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும். மேலும், குண்டகல்-இந்துபூர் டெமு ரெயில் (வண்டி எண் 07694) வருகிற 30-ந் தேதி வரை நிற்காமல் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story