பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பெண் குட்டியை ஈன்ற யானை
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் யானை பெண் குட்டி ஈன்றது.
பெங்களூரு:
பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு 15 வயதான வனஸ்ரீ என்ற பெண் யானையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த வனஸ்ரீ யானை, நேற்று முன்தினம் பெண் குட்டி யானையை ஈன்றது. தாய் யானையும், குட்டி யானையும் நலமாக இருப்பதாக பன்னரகட்டா உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வனஸ்ரீ யானை 3-வது முறையாக குட்டி ஈன்றுள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு சம்பத் என்ற ஆண் குட்டியையும், கடந்த 2020-ம் ஆண்டு துளசி என்ற பெண் குட்டியையும் ஈன்றுள்ளது. இதனால் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story