ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவு; 2 பேர் கைது


ஆசிய கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவை வென்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவு; 2 பேர் கைது
x

ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

ஆசிய கிரிக்கெட் டி-20 போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதியது. இதில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு ஆதரவு தெரிவித்து கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்த ஜாகீர் உசேன், சுகேல் தேஹித் பாஷா உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வெளிட்டுள்ளனர்.

அதேநேரத்தில் இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்தும் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த சிலர், சினிவாசப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சீனிவாசப்பூர் போலீசார் ஜாகீர் ஹூசேன், சுகேல் தேஹித் பாஷா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story