ராணுவ நிலத்தை கையகப்படுத்தி தொழிற்சாலைகள் கட்ட வேண்டும்
கோலார் தங்கவயலில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி அங்கு தொழிற்சாலைகள் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோலார் மாவட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி அங்கு தொழிற்சாலைகள் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோலார் மாவட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணுவத்துக்கு சொந்தமான நிலம்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் பி.இ.எம்.எல். பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான 983 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ராணுவத்துக்கு சொந்தமான, பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலத்தை கையகப்படுத்தி அங்கு தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசின் ஒப்புதலுக்கு மாநில அரசு அறிவித்து இருந்தது.
ஆனால் தற்போது அந்த நிலத்தில் ஆஸ்ரயா திட்டத்தின் கீழ் 400 வீடுகள் கட்ட முந்தைய பா.ஜனதா ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இதற்கு கோலார் மாவட்ட இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கண்டிப்பாக அங்கு தொழிற்சாலைகள் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சாலைகள் கட்ட வேண்டும்
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக அங்குதொழிற்சாலைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோலார் மாவட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி இளைஞர்கள் கூறுகையில்,'கோலார் மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் தினமும் பெங்களூருவுக்கு சென்று வருகிறார்கள்.
இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இளைஞர்கள் உள்பட அனைவரின் நலனை கருத்தில் கொண்டு கோலார் தங்கவயலில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தி உடனடியாக அங்கு தொழிற்சாலைகளை கட்ட வேண்டும்' என்று கூறின