போதைப்பொருள் விற்க முயன்ற வாலிபர் பிடிபட்டார்


போதைப்பொருள் விற்க முயன்ற வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் போதைப்பொருள் விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் கோனஜே போலீசார் நேற்று முன்தினம் நரிங்கானா கிராமத்தை அடுத்த தவிடுகோலி கிராஸ் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஒரு சிலர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவா் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்திய போது, நிற்காமல் செல்ல முயற்சித்தார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது வாலிபரின் மோட்டார் சைக்கிளில் 26 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கோனஜே பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்று தெரியவந்தது. அவர் மீது கோனஜே, காவூர் போலீசில் ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை செய்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் மீண்டும் அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 2 செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story