போக்குவரத்து விதிகளை மீறிய வாலிபருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறிய  வாலிபருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்
x

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சித்ரதுர்கா:

சித்ரதுர்கா டவுன் போக்குவரத்து போலீசார் பெங்களூரு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சிக்பேட்டையை சேர்ந்த பரத் என்பவரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாதது தெரிவந்தது. மேலும் அவர், மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டியதும் தெரியவந்தது. இதனால் அவருக்கு,

போலீசார் ரூ.18 ஆயிரம் அபாரதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அபராதத்திற்கான ரசீதை, பரத் செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி

வருகிறது.


Next Story