வாகன திருட்டு வழக்கில் 3 பேர் சிக்கினர்
பெங்களூருவில், வாகன திருட்டு வழக்கில் 3 பேர் சிக்கினர்.
பெங்களூரு:
பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமமூர்த்திநகரை சேர்ந்த மாரப்பா, நிதின், பானசாவடியில் வசித்து வரும் மனோஜ் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் இரவு நேரங்களில் சாலையோரம் மற்றும் வீட்டின் முன்பு நிற்கும் வாகனங்களை கள்ளச்சாவி பயன்படுத்தி திருடி விற்று வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ரூ.14.30 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story